Thillaiyadi valliammai history - பதினாறு வயதில் போராடிய தில்லையாடி வள்ளியம்மையை பற்றி தெரியுமா
* இன்று நாம் பார்க்க இருப்பது இளம்வீரங்கனை இளம்போராளி தனது பதினாறு வயதில் ஆங்கிலேயனை எதிர்த்து போராடிய பெண்மணி இவர் தில்லையாடி வள்ளியம்மை இவரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் சரி பதிவுக்கு செல்வோம் .
* இவரது இயற் பெயர் : தில்லையாடி வள்ளியம்மை இவர் பிறந்த நாள் 22-02-1898 இவரது இறப்பு நிகழ்ந்தநாள் : 22-02-1914 இவரது பெற்றோர்கள் முனுசாமி, மங்களத்தம்மாள் இவர் பிறந்த இடம் ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா வகித்த பதவி : விடுதலைப் போராட்ட வீராங்கனை
* தில்லையாடி வள்ளியம்மை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதினாறாவது வயதில் உயிரிழந்த ஒரு பெண் போராளி இவர் .
பிறப்பு:
* தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் 1898 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி, மங்களத்தம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். நெசவுத் தொழிலாளியான முனுசாமி, பிரித்தானிய ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகன்ஸ்பர்க் நகரில் ஒரு சிறிய வணிகத்தைத் தொடங்கினார். அங்கு தான் வள்ளியம்மை பிறந்தார்.
தில்லையாடி காந்தி நினைவுத் தூண்:
* 1913 -ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தென்னாப்பிரிவிக்காவில் வசித்து வந்த இந்தியர்களுக்கு பிரித்தானியர்களால் விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து நடத்திய அறப்போராட்டத்தில் கலந்துகொண்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகத் துணிந்து போராடினார். 1913 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல் நலக்குறைவால் விடுதலை செய்யப்பட்ட போதும் போராட்டக் குழுவினரின் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வெளியே வர மறுத்து, பின்னர் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரி இரத்து செய்த பின்பே விடுதலையை ஏற்று வெளியே வந்தார்
*. பதினாறே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவரை ‘பலன் ஏதும் கருதாமல் தென்னாப்பிரிக்காவில் தியாகம் செய்து வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை அவர்கள்தாம் எனக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர்’ என காந்தி பாராட்டியுள்ளார் இதை கேட்கும் பொழுது அப்பா காந்திக்கு போராட்ட உணர்வை ஏற்படுத்தியது நமது தமிழகத்தை சேர்ந்த தம்பதியர் பெற்றெடுத்த பிள்ளை தில்லையாடி வள்ளியம்மை என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது இல்லையா .
தில்லையாடியில் உள்ள வள்ளியம்மை நினைவு மண்டபம்:
* தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் வீரத்தை போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடிய என்ற ஊரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது காந்தி தில்லையாடிக்கு 1-5-1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது அதன் எதிரில் தான் தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம் கட்டப்பட்டுள்ளது
*. இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் மார்பளவு சிலை ஒன்று முன் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகிறதாம் . தில்லையாடியில் காந்தி நினைவு ஸ்தூபி அருகில் தற்போது அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டு திருப்பனந்தாள் காசிமட இணை அதிபரால் திறந்துவைக்கப்பட்டது.
நன்றி ...
book the best professional photographers available in gallerytoday thillaiyadi studio just visit you can get more info
ReplyDelete