கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?
அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது என்பதைப்பற்றித்தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாய் வாழ ஆசைப்பட்டால் அதற்கு சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் அடிப்படையான முதல் பழக்கமாக இருக்க வேண்டியது கை கழுவுவது ஆகும். சாப்பிடும் முன்னரும், பின்னரும் மேலும் வெளியில் சென்று வந்தால், ஏதாவது பொருளை தொட்டால் உடனடியாக கை கழுவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கை கழுவுவது உங்களுக்கு சாதாரண ஒன்றாக தோன்றலாம் ஆனால் கையை ஒழுங்காக கழுவவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி கழுவவில்லை என்றாலோ நீங்கள் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த பதிவில் கை கழுவாமல் இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம். சுவாசக்கோளாறு ஏற்படலாம் கையை கழுவவில்லை என்றாலும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று நம் அம்மாக்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் நினைக்கலாம் இதனால் சளி மட்டும்தான் பிடிக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல, காய்ச்சல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகள் இதனால் ஏ...
Comments
Post a Comment