கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

அனைவர்க்கும் வணக்கம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு கையை சரியாக கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்படுகிறது என்பதைப்பற்றித்தான் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாய் வாழ ஆசைப்பட்டால் அதற்கு சில பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அதில் அடிப்படையான முதல் பழக்கமாக இருக்க வேண்டியது கை கழுவுவது ஆகும்.
 சாப்பிடும் முன்னரும், பின்னரும் மேலும் வெளியில் சென்று வந்தால், ஏதாவது பொருளை தொட்டால் உடனடியாக கை கழுவுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். கை கழுவுவது உங்களுக்கு சாதாரண ஒன்றாக தோன்றலாம் ஆனால் கையை ஒழுங்காக கழுவவில்லை என்றாலோ அல்லது அடிக்கடி கழுவவில்லை என்றாலோ நீங்கள் பல ஆரோக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.இந்த பதிவில் கை கழுவாமல் இருந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.
 சுவாசக்கோளாறு ஏற்படலாம் கையை கழுவவில்லை என்றாலும் உடல்நிலை சரியில்லாமல் போகும் என்று நம் அம்மாக்கள் சொல்வது உண்மைதான். நீங்கள் நினைக்கலாம் இதனால் சளி மட்டும்தான் பிடிக்கும் என்று ஆனால் உண்மை அதுவல்ல, காய்ச்சல், நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறுகள் போன்ற பல பிரச்சினைகள் இதனால் ஏற்ப்படலாம்.சுத்தமாக அடிக்கடி கையை கழுவுவது உங்களுக்கு சளி மற்றும் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பை 21 சதவீதம் வரை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. 
வயிற்றுப்போக்கு கையை சரியாக கழுவும் பழக்கம் இல்லாதவர்களுக்கு வயிறு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பாத்ரூம் சென்று வந்த பிறகு கையை கழுவுவது நீங்கள் சுகாதாரமாய் இருப்பதற்கான முதல் படி ஆகும். மலம் கழிக்கும் போது வெளிப்படும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் வயிறு தொடர்பான பல பிரச்சினைகளை உண்டாக்கும் குறிப்பாக சாலோமோனோலா, நோரோவைரஸ் போன்றவை ஆபத்தானவையாகும்.
நச்சு உணவு கையை கழுவாமல் உணவு உண்பதும் சரி, உணவை பரிமாறுவதும் சரி உணவை நச்சாக்குவதற்கு சமமாகும். உணவை சமைக்க தொடங்கும் முன்னும், காய்கறி மற்றும் இறைச்சிகளை சுத்தப்படுத்தும் முன்னரும் கையை கழுவ வேண்டியது அவசியம். இதன்மூலம் பாக்டீரியா பரவுவதை பெருமளவில் நீங்கள் தடுக்கலாம். அசைவ உணவுகளை சுத்தப்படுத்தும் முன்னரும், பின்னரும் கையை கழுவ மறந்து விடாதீர்கள். 
மற்றவர்களுக்கு நோயை பரப்பலாம் நீங்கள் நாள் முழுவதும் உங்களை சுற்றியிருக்கும் பல பொருட்களை தொடுவீர்கள். உங்கள் கண், வாய், மூக்கு, காது போன்றவற்றை தொட்டு விட்டு கையை கழுவாமல் கதவு, கைப்பிடி போன்றவற்றை தொடுவீர்கள். இதனால் அந்த இடஙகளில் வைரஸ்கள் பரவியிருக்க வாய்ப்புள்ளது. இந்த இடத்தை மற்றவர்கள் தொடும்போது அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. 
நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள கை கழுவாமல் இருப்பது உங்களுக்கு நீங்களே நோயை ஏற்படுத்தி கொள்ள வழிவகுப்பதுடன் மற்றவர்களுக்கும் ஆபத்தை உண்டாக்குவதாக அமைகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இதனால் உங்களால அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம். குழந்தைகளை தொடும் முன் கண்டிப்பாக கையை கழுவ வேண்டியது அவசியமாகும். 
பாக்டீரியாவை தடுக்கலாம் கை கழுவுவது என்பது நீங்கள் நோயை பெறாமல் இருப்பதற்கு செய்யப்படும் முதல் செயலாகும். எனவே இதனை அடிக்கடி செய்வதன் மூலம் பாக்டீரியாக்கள் பரவுவதை நீங்கள் தடுக்கலாம். இதனால் உங்கள் ஆன்டி பாக்டீரிய மருந்துகள் தேவையே இல்லை. தினமும் 5 அல்லது 6 முறைக்கு மேல் கை கழுவுபவர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும் வாய்ப்பு 60 சதவீதம் குறையும்.
இந்த பதிவை இறுதிவரைக்கும் படித்ததற்கு மிக்க நன்றி மேலும் இது போன்ற பல வகையான சுவாரசிய தகவலை தரிந்து கொள்ள நமது பக்கத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Comments

  1. 1xbet korean registration, registration, odds, results - legalbet
    1xbet korean registration, registration, odds, results. Bet on sports and casino 메리트카지노 with 1xbet korean 제왕 카지노 registration, odds, results. Bet on sports and casino with 1xbet korean registration, 1xbet odds

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

Appalam - அப்பளத்தில் எவ்வளவு சத்துக்கள் இருக்கிறது என்று தெரியுமா ?