இராமருக்கு அணில் எப்படி உதவியது என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?

வானரங்களின் ஆனந்தம்
அனைவர்க்கும் வணக்கம் இராவணனை அழிக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் இராம அவதாரம் அதுபோல ராவணன் யாருடைய அவதாரம் என்றால் பெருமாளின் காவலராக இருந்த இரண்டு பேர் திருமாலை காணவந்த முனிவர்களை காணவிடாமல் தடுத்ததால் இந்த காவலர் இருவரும் சாபத்திற்கு உள்ளானார்கள் அதன் பின் இருவரும் தங்கள் தவறை உணர்ந்ததால்திருமால் இவர்களுக்கு சாப விமோட்சனமாக 7 ஜென்மம் சிறு சிறு கஷ்டங்கள் பட்டுவிட்டு வறீர்களா ? அல்லது  ஜென்மம் என்னை எதிர்த்து என்கைகளால் அழிந்து மேலோகம் வறீர்களா ? என்றார் அதற்கு காவலரகள் இருவரும் 7 ஜென்மம் உங்களை பிரிந்து இருக்க முடியாது 3 ஜென்மத்தில் தங்களை எதிர்த்தாவது மேலோகம் வந்து தங்களை வந்தடைகிறோம் என்றனர் அதன் படி முதல் பிறவியில் இறைஞாட்சன் இறைஞகசிபு ஆகவும் இரண்டாவது பிறவியில் ராவணன் கும்பகர்ணனாகவும் மூன்றாவது பிறவியில் சிசுபாலதந்தவக்ரராகவும் பூலோகத்தில் பிறந்து ஏன் கைகளால் மாண்டு மீண்டும் மோட்சம் அடைவீர்கள் என்றார் திருமால் சரி கதைக்கு வருவோம்
சீதையின் இருப்பிடம்

இராவணனுக்கும், இராமருக்கும் இடையே நடந்த மாபெரும் போரே உலகம் போற்றும் இதிகாசமான இராமாயணமாக மாறியது. இராமர் சர்வ வல்லமையும் பொருந்திய அரசனாகவும், வீரனாகவும் இருந்தாலும் சீதையை மீட்பதற்கு அவருக்கு பலரின் உதவி தேவைப்பட்டது. சீதையை மீட்க இராமருக்கு அனுமன், சுக்ரீவன், ஜம்பவான் என பல மாவீரர்கள் உதவினர்.

 ஆனால் இவர்களையெல்லாம் தாண்டி உதவி செய்து வரலாற்றில் இடம் பிடித்தது யாரெனில் அது சிறிய உயிரினமான அணில்தான். இலங்கைக்கு செல்ல வானர சேனை கடல் மீது பாலம் கட்டும்போது அணில் அவர்களுக்கு செய்த உதவி அதற்கு அழியாப்புகழை பெற்றுக்கொடுத்தது. இராமருக்கும், அணிலுக்குமான இந்த சம்பவம் அதிக சுவாரசியம் நிறைந்ததாகும். அந்த சம்பவத்தை பற்றி இந்த பதிவில் முழுமையாக
பார்க்கலாம்.
பாலம் கட்ட முடிவு
சீதையின் இருப்பிடம் சீதை இராவணனால் கடத்தி செல்லப்பட்ட பிறகு இராமரும், லட்சுமணனும் அவரை தேடி அலைந்து கொண்டிருந்தனர். இறுதியில் வானர வேந்தன் சுக்ரீவனுடன் இணைந்து ஆஞ்சநேயரின் உதவியின் மூலம் சீதை கடல் கடந்து இலங்கையில் இருக்கும் அசோகவனத்தில் இராவணனால் சிறைபிடிக்க பட்டிருப்பதை இராமன் அறிந்தார். வானர சேனையுடன் இலங்கைக்கு செல்ல கடற்கரைக்கு வந்து சேர்ந்தார் இராமர்.
How the squirrel helped Lord Rama to build the bridge
 பாலம் கட்ட முடிவு

 கடற்கரைக்கு வந்த இராமரும் வானர சேனையும் பறந்து விரிந்திருந்த கடலை எப்படி கடப்பது என்று குழப்பமுற்றனர். நீண்ட நேர சிந்தனைக்கு பிறகு கடல் மேல் பாலம் கட்டுவதென்று முடிவு செய்தனர் . வானரங்களும், கரடிகளும் கிடைக்கும் பொருட்களையும், பாறைகளையும் கொண்டு பாலம் கட்ட முடிவெடுத்து அதற்கான செயலில் ஈடுபட தொடங்கினார்கள். வானரங்களின் ஆனந்தம் மகாவிஷ்ணுவின் அவதாரமான இராமருக்கு உதவி செய்யப்போகும் மகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் வானரங்களும், கரடிகளும் மற்ற மிருகங்களும் பெரிய பெரிய பாறைகளை தூக்கி கொண்டு வந்து பாலத்தை கட்ட தொடங்கினர். மாபெரும் பலசாலிகளான வானரங்கள் மலை அளவு இருக்கும் பாறைகளை தூக்கி வந்து வேகமாக பாலத்தை கட்ட முயன்றனர்.
இராமரின் அறிவுரை
மற்ற மிருகங்கள் கடற்கரையில் இருந்த அனைத்து மிருகங்களும் இராமருக்கு உதவ விரும்பின, எனவே அனைத்தும் தன்னால் முடிந்த வழியில் இராமருக்கு உதவி செய்தன. மீன்களும், மற்ற கடல் உயிரினங்களும் பாலத்தை ஒழுங்கப்படுத்தவும், இடைவெளிகளை நிரப்பவும் உதவின. பறவைகள் அவர்களால் முடிந்த கற்களை தூக்கிவந்து பாலத்தின் மீது போட்டது.
மற்ற மிருகங்கள்
அணிலின் உதவி

சிறிய அணில் ஒன்று அனைவரும் செய்யும் உதவியை பார்த்து தானும் உதவி செய்ய விரும்பியது. என்ன செய்யலாம் என்று யோசித்த அணில் கரையில் கிடந்த கூழாங்கற்களை எடுத்து கடலில் போட தொடங்கியது.இவ்வாறு தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது சிறிது நேரத்தில் அணில் சோர்வடைந்து விட்டது, ஆனால் மேலும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதற்கு இருந்தது. எனவே கரைக்கு சென்று மணலில் படுத்து புரண்டது பின் தண்ணீரின் முனைக்கு சென்று தண்ணீரில் மூழ்கி எழுந்தது. பின்னர் மீண்டும் மணலில் புரண்டு தண்ணீரில் நனைந்து என மணலில் இருக்கும் சிறிய கற்கள் மூலம் பாலத்திற்கு பலம் கூட்ட முயன்றது.

 வானரங்களின் கோபம்
வானரங்களின் ஏளனம்
 இந்த சிறிய அணில் கரைக்கும், தண்ணீருக்கும் இடையே ஓடிக்கொண்டே இருந்ததால் பெரிய பாறைகளை தூக்கி கொண்டு வந்த வானரங்களுக்கு இடைஞ்சலாக இருந்தது. எனவே அவர்கள் அதனை திட்ட தொடங்கினர், தங்கள் பாதையை விட்டு விலகும்படி எச்சரித்தனர். அதற்கு அணில் நானும் என்னால் முடிந்த இந்த சிறு மணல் துகள்களை சேர்த்து பாலம் கட்ட உதவுகிறேன் என்று கூறியது.
இராமரின் நன்றி
வானரங்களின் ஏளனம்

அணில் கூறியதை கேட்ட வானரங்கள் சிரிக்க தொடங்கியது. இந்த சிறிய மண்துகள்கள்தான் நாங்கள் கட்டும் இந்த மாபெயரும் பாலத்தை வலிமைப்படுத்த போகிறதா? எங்கள் பாதையிலிருந்து விலகி போய் உன்னுடைய வேலையை பார் என்று விரட்டினர். ஆனால் அணிலை அவர்களின் பேச்சுக்களை காதில் வாங்கி கொள்ளாமல் அதன் வேலையை தொடர்ந்தது. இறுதியில் கோபமுற்ற வானரம் ஒன்று அணிலை கரையிலிருந்து தூக்கி எரிந்தது.
அணிலின் உதவி
இராமரின் அறிவுரை

இதனை பார்த்த இராமர் அணில் கீழே விழுவதற்கு முன் அதனை பிடித்து பத்திரமாக கீழே வைத்தார். மேலும் வானரங்களை பார்த்து " நண்பர்களே நீங்கள் மாபெரும் பலசாலிகள், நீங்கள் மிகப்பெரிய பாறைகளை கொண்டு வந்து பாலத்தை அமைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் கட்டும் பாலத்தில் இருக்கும் இடைவெளிகளை இங்கிருக்கும் இந்த சின்ன உயிரினங்கள் கொண்டு வந்து வைத்த கற்கள்தான் நிரப்புகிறது. அதனால்தான் உங்கள் பாலமும் பலம் பெற்றிருக்கிறது. இந்த சிறிய துகள்களில் இந்த அணிலின் பங்கும் இருக்கிறது. ஆனால் உங்களுக்கு உதவியவரை நீங்கள் இப்படி கோபத்தில் தூக்கி எரிகிறீர்களே " என்று கூறினார்.

இராமரின் நன்றி
வானரங்களின் கோபம்
 இராமர் கூறியதை கேட்ட வானரங்கள் அவமானத்தால் தலையை கீழே தொங்கப்போட்டு கொண்டனர். இராமர் அணிலிடம் திரும்பி " என் நண்பா என் சேனை செய்த தவறுக்காக என்னை மன்னித்துவிடு, நீ செய்த உதவிக்கு மிக்க நன்றி, மகிழ்ச்சியாக சென்று உன் வேலையை தொடர்ந்து செய் " என்று கூறியதுடன் அதன் முதுகை மெல்ல வருடினார். இராமரின் விரல்கள் வருடிய இடத்தில் அணிலுக்கு மூன்று கொடுகள் வந்தது.

Comments

Popular posts from this blog

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )