Navapashanam நவபாஷாணம் சிலை பற்றி பேசலாம்

 * நவபாஷாணம் என்றால் யாது பாஷாணம் என்றல் விஷயம் என்று பொருள் நவம் என்றால் ஒன்பது ஆகும் நவபாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்தர்கள் முறைப்படி கட்டுவதாகும் பாஷாணங்களில் மொத்தம் 64 கு உள்ளன இதில் நீலி என்ற வகையும் உண்டு நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்க கூடியது ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் வேதியல் இயற்பியல் பண்புண்டு அதை சிற்றறியல் முறைப்படி அணுக்களை பிரித்து சேர்ப்பதை நவபாஷாணம் என்பார்கள் ஒன்பது பாஷாணங்கள் என்னவென்றால் சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், காரம், கந்தகம், பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம், இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்திருக்கின்றன நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயமாகும் .
Image result for navapashanam hd images
             * நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள் நவகிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும் தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளது பழனி முருகன் கோவில், கொடைக்கானல் அருகில் உள்ள பூம்பாறை குழந்தைவேலப்பர் கோவில், மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது இதில் இரண்டு போகர் உருவாக்கியவை தேவிப்பட்டினத்தில் உள்ளதை யார் உருவாக்கியது என்பது தெரியவில்லை நவபாஷாணம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையவை நவபாஷாணங்களால் உருவான தெய்வ சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும் பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவகிரகங்களை ஒருங்கே வழிபடுவதற்கு சமம் இதை அறிந்தே போகர் சித்தர் பழனி மலையில் நவபாஷாண முருகர்சிலையை உருவாக்கினார் இந்த சிலைக்கு அபிஷகம் செய்து அந்த அபிஷக தீர்த்தத்தை அருந்தினால் தீராத நோய் ஏதுவாக இருந்தாலும் சரியாகிவிடும்
Image result for navapashanam hd images
            * விஷத்தை அருந்துவதால் உயிர் உடலை விட்டு போய்விடும் என்றுதானே கேள்விப்பட்டு இருக்கிறேன் இதென்ன புதுசா இருக்கிறது என்று யோசிப்பவர்களுக்கு பொதுவாக உடலில் நோய் வருவதற்கான காரணம் விஷம்தான் அது எப்படிவேண்டுமானாலும் வந்திருக்கலாம் அப்போ நவபாஷாண விஷத்தையும் அருந்தும் பொது உடலில் உள்ள விஷத்தை நவபாஷாணம் முறியடித்துவிடும் அதாவது முல்லை முள்ளால் எடுப்பது போல இந்த நவபாஷாண சிலையை போகர் எப்படி உருவாக்கினார் என்றால் இயர்கையில் உள்ள மரம் செடி கொடி போன்ற இயற்கை மூலிகைகளை கொண்டு உருவாக்கியுள்ளார் பொதுவாக ஒருவருக்கு ஜாதகம் பார்க்கிறோம் என்றால் கிரகங்களின் அசைவுகளை வைத்தே கணக்கிடப்படுகிறது ஒருவருக்கு இந்த நோய் வரும் எனவும் ஆறு மாதம் களைத்து அந்த நோய் சரியாகிவிடும் என்பதயெல்லாம் ஒன்பது கிரகங்களில் அசைவுகளை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது பொதுவாகு ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நோய் இருக்கும் அதேபோல ஒருசில கிரகத்திற்கு நோயை குணமாகக்கூடிய சக்தியும் இருக்கிறது இதை வைத்து தான் ஒருவருக்கு சிலமாதம் கிளைத்து இந்த கிரகம் இங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றும் இந்த மனிதன் வாழ்வில் இப்படித்தான் இருப்பான் என்றும் இதெல்லாம் இவனது வாழ்வில் நாடாகும் என்னெல்லாம் கணிக்கிறார்கள் இது போலத்தான் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விஷம் இருப்பதை கண்டறிந்து அந்த ஒன்பது விஷயங்களையும் ஒன்றாக சேர்க்கும் பொழுது அது ஒரு மருந்தாக பயன்படும் என உருவாக்கி இருக்கிறார்கள் இந்த நவபாஷாண சிலையை போகர் மட்டும் தனியாக உருவாகவில்லை அவருக்கு உதவியாக 81 சித்தர்கள் உதவியிருக்கிறார்கள் மேலும் இந்த நவபாஷாண சிலையை ஒன்பது வருடங்கள் செய்து இருக்கிறார்கள் அது எப்படி என்றால் ஒவ்வொரு விஷத்திற்கு ஒன்பது சித்தர்கள் அதாவது  ஒன்பது சித்தர்கள் சேர்ந்து ஒரு விஷத்தை செய்து இருக்கிறார்கள் அதன்படி பார்த்தால் ஒன்பது விஷத்தையும் செய்வதற்கு 81 சித்தர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள் இந்த 81 சித்தர்களுக்கும் தலைமை சித்தராக புலிப்பாணி என்ற சித்தரை போகர் நியமனம் செய்திருக்கிறார் .
            Image result for navapashanam hd images
            * எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு கொடிய நோய்க்காக சுமார் 2800 வருடத்திற்கு முன்னாள் போகர் சித்தர் மூலம் உருவாக்கப்பட்டது தான் இந்த நவபாஷாணம் முதலில் இந்த நவபாஷாண முருகன் சிலை ஏன் பழனியில் வைக்கப்பட்டது அனைவர்க்கும் தெரிந்த புராண கதை முருகனுக்கும் அண்ணன் விநாயகருக்கும் இடையே உலகை மூன்று முறை வளம் வந்து முதலில் வருபவர்களுக்கு ஞானப்பழம் வழங்கப்படும் என்றும் அந்த போட்டியில் விநாயகர் வெற்றி பெற்றதால் முருகன் கோபம்கொண்டு பழனிக்கு வந்துவிட்டார் என்பது தெரியும் ஆனால் அங்கு ஏன் நவபாஷாண சிலை வந்தது ஏன் ஒரு கடவுள் சிலையை நவபாஷாண சிலையாக செய்வதற்க்கு கரணம் என்ன அதற்கு பதில் இதை நேரடியாவே மக்களுக்கு கொடுத்திருக்கலாமே என்று கேட்டால் தமிழ்நாட்டை ஆண்ட ராஜா ராஜா சோழன் பாண்டியர்களும் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது மற்றவர் கைக்கு இந்த மருந்து கிடைத்துவிடக்கூடாது என அளித்திருந்தால் அல்லது அதன் பின்வந்த சுல்தான்கள் பிரிட்டிஷ் இவர்கள் இந்த மருந்தின் மகத்துவத்தை தெரிந்து கொண்டு எடுத்து செல்ல நிறைய வாய்ப்புகள் இருந்திருக்கின்றனர் பொதுவாக தமிழகத்தில் கடவுள்களுக்கு என்று ஒரு மரியாதையை உண்டு அதுவும் முருகன் என்றால் சொல்லவேண்டியதே இல்லை முருகை பிடிக்காதவர் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது அதனால் தான் அப்பேற்பட்ட முருகன் சிலையில் இந்த நவபாஷாண சிலை செய்வதால் யாருக்கும் இந்த மருந்தின் மீது தனியுரிமை ஏற்படாது ஏனென்றால் முருகன் என்பவர் பொதுவானவர் இதனையெல்லாம் அறிந்தே போகர் சித்தர் இவ்வாறு செய்திருக்கிறார்

                     * இதில் மற்றொரு சுவாரசியம் என்னவென்றால் இந்த நவபாஷாண சிலை கல் கிடையாது மூலிகைகளை நன்கு அரைத்து இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது பொதுவாக பாறையால் செய்யப்பட்ட சிலைகூட சில சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கும் பொது 2500 வருடத்திற்கு முன் செய்யப்பட்ட இந்த முருகன் சிலை எப்படி கம்பிரமாக நிற்கிறது என்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும் .

                     * இந்த போகர் சித்தர் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பழனி மலையின் மேல்  போகர் சித்தரோட சமாதி இருக்கு ஆனால் அங்க போகர் சித்தரோட உடல் இல்ல அது ஒரு குகை அந்த குகையை யாரும் இன்று வரை சென்று பார்க்கவில்லை அந்த குகைக்குள் தான் போகர் கடைசியாக தவம் செய்ய சென்றிருக்கிறார் நிறைய பேரோட நம்பிக்கை என்னவென்றால் நாம் இந்த குகைக்குள் செல்லும் பொது அது நேராக பழனி மலையின் மையப்பகுதிக்கு செல்லும் அங்கு இன்றும் போகர் தியானம் செய்துகொண்டு இருக்கிறார் என்பது நிறைய பேரோட நம்பிக்கையா இருக்கு .

                     * இந்த நவபாஷாண முருகன் சிலை ஆரம்ப காலத்தில் பழனிமலையில் வாழ்ந்த மலைவாழ் மக்களால் விமர்சையாக கொண்டாப்பட்டு வந்திருக்கிறது ஆனால் நாட்கள் ஆகஆக அங்கு இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர் பின்னர் சில ஆண்டுகளுக்கு பின் வந்த சேரமன்னன் வேட்டையாடுவதற்காக மழைக்கு செல்லும் பொழுது அங்கு இருந்த முருகன் சிலையை கண்டறிந்து அதன் வரலாறை அப்போ அங்கு இருந்த மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு அந்த மலைமேல் கோவில் கட்டியிருக்கிறார் அந்த கோவில்தான் இப்ப இருக்கும் பழனி முருகன் கோவில் .

                     * இந்த கோவிலை யார்யார் வழிவழியாக பூஜை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்றால் ஆரம்பத்தில் சொன்னது போல புலிப்பாணி என்ற சித்தரை போகர் 81 சித்தர்களுக்கும் தலைமை சித்தராக நியமித்தார் இல்லையா அவருடைய பரம்பரைதான் இந்த கோவிலுக்கு மக்கள் வந்தாலும் வராட்டியும் தொடர்ந்து பூஜை செய்து கொண்டு வந்திருக்கின்றனர் அப்போது இருந்த சேரமன்னன்னும் உங்கள் வழிபாட்டில் நாங்கள் எந்த விதத்திலும் குறுக்கிட மாட்டோம் எங்கள் மதத்தை உங்கள் மீது திணிக்க மாட்டோம் என்று சொன்னார் ஆனால் இது 16 ஆம் நூற்றாண்டு வரை மட்டும் தான் நடைபெற்றது அதன் பிறகு  சமஸ்கிரதம் வந்ததால் மற்ற கோவிலைகளில் எவ்வாறு பூஜை வழிபாடுகள் நடக்கின்றனவோ அது போல் பழனியிலும் நடக்கவேண்டும் என சட்டம் கொண்டு வந்தார்கள் .

                    * இனொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் 30 கோடிக்கும் அதிகமான காணிக்கைகள் வருகிறதாம் மேலும் என்னவென்றால் இப்ப இந்த கோவிலில் இருக்கும் முருகர் சிலை நவபாஷாண சிலை கிடையாது எனவும் அது போல் உருவாக்கப்பட்ட போலி எனவும் கூறுகிறார்கள் ஏனெனில் சன்ஸ்கிரிட் வந்த சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த நவபாஷாண முருகன் சிலைக்கு பால் தண்ணிர் போன்ற பல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்வதால் அந்த சிலைக்கு சில பாதிப்புகள் உண்டாகின்றன அதனால் அந்த நவபாஷாண சிலையை தனி ஒரு பாதுகாப்பான அறையில் வைத்து விட்டு போலி சிலையை மக்கள் முன் காட்டுகிறார்கள் என்ற ஒரு தகவலும் உள்ளது பெரிய விழாக்களின் பொது மட்டும் உண்மையான சிலை வெளியே கொண்டுவரப்படுகிறதாம் .

இந்த ஆர்டிகள் உங்களுக்கு பிடிச்சிருந்தால் பாகத்தை பின்தொடருங்கள் நன்றி ...

Comments

Popular posts from this blog

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

இராமருக்கு அணில் எப்படி உதவியது என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?