தமிழகத்தை அதிர வைத்த முக்கிய சம்பவங்கள் 2018...- அறிவோம் ஆயிரம்
2018 இல் நடந்த நிகழ்வுகள் எண்ணற்றவை. சில நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. சில நிகழ்வுகள் நமது மனதில் இடம்பிடித்து மாற்றத்தை தந்துள்ளது. அந்த வகையில் 2018 இல் தமிழகத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளைப் பற்றி இந்த ஆர்ட்டிகள்ல பார்ப்போம்.
1. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு
மே மாதம் 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் பொழுது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 102 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையைத் தமிழக அரசு மே 28 ஆம் தேதியன்று பிறப்பித்தது.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் டிசம்பர் 15 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், ஜனவரி 21 அன்று உத்திரவு பிறப்பிக்கும் வரை ஆலையைத் திறக்கக்கூடாது என்று உத்திரவிடப்பட்டது.
2.மு.கருணாநிதி (கலைஞர்)
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றியுள்ள தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர்.மு.கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக ஆகஸ்ட் 7 அன்று காலமானார். அதன் பிறகு அக்கட்சியின் தலைவர் பதவி காலியானது 28 அன்று தி.மு.க.வின் புதிய தலைவராகச் செயல் தலைவர் பதவி வ7கித்துவந்த மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார் .
3. நியூட்ரினோ திட்டம்
தேனியில் அமல்படுத்தவிருந்த மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்குத் தேசியக் பசுமைத் தீர்ப்பாயம் நவம்பர் 2 அன்று தடைவிதித்தது .
4. பசுமை வழிச்சாலை
சென்னை முதல் சேலம் இடையேயான போக்குவரத்தில் இரண்டு மணி நேரத்தைக் குறைக்க ரூ.பத்தாயிரம் கோடி செலவில் பசுமைவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை மாநில அரசு ஜூன் 26 அன்று தொடங்கியது.
5. ஸ்மார்ட் கார்டு .
தமிழகத்தில் 1.8 கோடி ரேஷன் கார்ட்களுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி 2017 லேயே தொடங்கிவிட்டது .புதிய ஸ்மார்ட் கார்டுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்கும் முறை ஏப்ரல் 27 அன்று உத்திரவிட்டது.
Comments
Post a Comment