சிறப்பு மிகுந்த சிவாலயங்கள் - அறிவோம் ஆயிரம்
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்:
காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில் பஞ்சபூத தலங்களில் நிலம் என்று குறிப்பிடுகிறது .பஞ்சபூத தளங்களில் முதல் தலமான இந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன் பூசித்த மணல் ,லிங்கமே மூலவராக இருக்கிறது .அன்னையின் தவத்தை சோதிக்க விரும்பிய இறைவன் ,மணல் லிங்கம் செய்து வழிபட்டு வந்த இடத்தில் வெள்ளத்தை உருவாக்கினார் .வெள்ளத்தில் லிங்கம் அடித்து செல்லாமல் இருக்க அம்மன் ,லிங்கத்தை இரு கைகளாலும் தழுவிக்கொண்டதாக தல வரலாறு சொல்கிறது .இப்பொழுது இந்த லிங்கத்தில் அன்னை இறுக தழுவிய கை தடம் இருப்பதை காணலாம் .இங்குள்ள ஒற்றை மாமரம் 3500ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது .இந்த மரத்தில் இருந்து நான்கு வகையான (வேதங்கள் )சுவை கொண்ட கனிகள் கிடைக்கின்றன .
பாஸ்கரேஸ்வரர் கோவில் :
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் இருக்கிறது பாஸ்கரேஸ்வரர் திருக்கோவில் .சிவபெருமானின் சன்னதிக்கு எதிரில் நின்று சூரியபகவான் தரிசனம் செய்யும் கோலத்தை ,இந்த ஆலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாது என்கிறார்கள் .இந்த ஆலயம் பிதுர் தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது .கார்த்திகை ,உத்திரம் ,உத்திராடம் ஆகிய நட்சத்திர நாட்கள் ,சிம்ம லக்னம் ,சிம்ம ராசி ,சித்திரை ,கார்த்திகை ,ஆவணி ஐப்பசி மாதம் முதல் தேதியில் பிறந்தவர்கள் ,வளர்பிறையில் முதல் ஞாயிற்று கிழமையில் இங்குள்ள சிவபெருமானையும் ,சூரிய பகவானையும் வழி பட்டால் தோஷங்கள் விலகும் என்பது ஐதீகம் .மேலும் நீண்ட நாள் நோய் நீங்குமாம் .இந்த ஆலயத்தில் சஷ்டி பூர்த்தி செய்பவர்களின் ஆயுள் நீடிக்கும் என்று கூறுகிறார்கள் .
புஷ்பவனேஸ்வரர் ஆலயம் ;
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் என்ற ஊரில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கிறது புஷ்பவனேஸ்வரர் ஆலயம் அல்லது கோவில் .இத்தல இறைவன் புஷ்பவனேஸ்வரர், புவனநாதர் என்று அழைக்கப்படுகிறார் .காசி நகரை விடவும் புண்ணியம் தரும் தலமாக இது போற்றப்படுகிறது .இங்குள்ள வைகை ஆற்றில் இறந்தவர்களின் அஷ்தியை கரைத்து மோட்ச தீபம் ஏற்றுவது வழக்கமாக உள்ளது இந்த ஆலயத்தில் உள்ள மூலவருக்கு எதிரில் உள்ள நந்தி சற்று விலகி இருப்பது தனிச்சிறப்பாகும் .திருமணத்தடை விலக , குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, இத்தல இறைவனை வழிபடலாம்.சரியாக பேச்சி வராதவர்களுக்கு, கலைகளில் சிறந்து விளங்கவும்.ஆயுள் விருத்தியாகவும் இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சதுரகிரி மலைக்கோவில் :
மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் அமைந்துள்ள ஒரு மலைக் கோவில் தான் ,சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி ஆலயம் ஆகும் .இந்த ஆலயத்திற்கு மதுரை மாவட்டம் சாப்டுர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியில் இருந்தும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் இருந்தும் ,தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இருந்தும் மலை பாதைகள் உள்ளன .பழனி மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ,நவபாஷண முருகனின் சிலையை ,சதுரகிரி மலையில் தங்கியிருத்த காலத்தில் தான் போகர் சித்தர் உருவாக்கினார் என்று சொல்லப்படுகிறது .இந்த மலை சித்தர்கள் பலரும் உலவும் புண்ணிய பூமியாக திகழ்கிறது இங்குள்ள மலை அருவி நீரும் ,மூலிகைகளும் நோய்களை தீர்க்கவல்ல அருமருந்துகள் .
Comments
Post a Comment