அனுபவமே சிறந்த ஆசான்( ஆசிரியர் ) -அறிவோம் ஆயிரம்

     இந்த கதையை எழுதுவதற்கு முன்னாள் நான் கவனமுடன் எழுதவேண்டும் ஏனென்றால் இதில் நான் ஆசிரியர்களை பற்றியும் நமது நாட்டை பற்றியும் எழுத இருக்கிறேன் இதை நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பெரிய போராட்டத்தை அவர்கள் தொடர்வார்கள் இது நமக்கு தேவையில்லை நான் உள்ளடகி உள்ளபடி புரியும்படி தெளிவுபெறும்படி இப்படி நடந்து வருவதையும் 
நடந்துகொண்டிருப்பதையும் நடக்கப்போவதையும் எழுதுகிறேன் இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் என்றால் இதனை உங்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் இதில் ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும் ...
 சரி இப்ப வாங்க கதைக்குள்ள போவோம் இப்ப எல்லாம் படிப்பு என்பது தனித்தனி பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது இதற்கு முக்கிய காரணம் நீங்கள் நினைப்பது போல் அல்ல நீங்கள் நினைப்பீர்கள் மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைவதற்க்காக என்று நினைப்பீர்க அண்ணல் அது தவறு இது அனைத்தும் மெக்காலே என்ற ஒரு துஷ்டன் செய்த வேலை ( இந்த மெக்காலேவை வேறொரு பதிவில் பதிவிட்டுள்ளேன் அதனை பாருங்கள் ) இதற்கு முக்கிய கரணம் ஒரு படம் என்றல் ஒரு ஆசிரியர் அவருக்கு மட்டும் ஊதியம் கிடைக்கும் மற்றவர்கள் என்ன செய்வது அதற்காகத்தான் இவர்கள் படத்தை பிரித்துவைத்துள்ளார்கள் மேலும் புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் சுமார் நூற்றுஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு ஆசிரியர் மட்டுமே வழிநடத்தி செல்வார் அப்போ அப்ப படித்தவர்கள் என்ன முட்டாளா இப்பபடிப்பவர்கள் என்ன அறிவாளியா இல்லை என்னை கேட்டால் அப்போ படித்தவர்கள் தான் அறிவாளி என்று நான் சொல்வேன் அதற்காக இப்ப படிப்பவர்கள் ஒன்றும் முட்டாள் என்று நான் சொல்லவில்லை அதற்குஅர்த்தம் என்னவென்றால் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னாலும் இந்த தமிழ்நாட்டில் மனிதர்கள் வாழ்ந்தார்கள் ( ஐந்நூறு என்பது நான் இந்த கதைக்காக சொன்னேன் உண்மையில் இந்த உலகத்தில் மூத்த குடி தமிழ் குடி என்னத்தே உண்மை ) 
 அப்போ வாழ்ந்தவர்கள் எல்லாம் அறிவிலும் வீரத்திலும் திறமையிலும் பிரம்மிப்பை ஏற்படுத்துபவர்கள் அந்த காலத்தில் ஒருவர் இருக்கிறான் என்றால் அவனுக்கு கல்வித்திறன் தற்காப்பு திறன் பொதுஇடத்தில் எப்படி நடந்துகொள்வது என்ற திறன் மற்றவரிடம் எவ்வாறு பேசவேண்டும் என்ற திறன் தொழில் திறன் இவை அனைத்தும் அவன் ஒருவரிடம் இருக்கும் மேலும் அவர்கள் தற்சார்பு வாழ்க்கையை மேற்கொண்டனர் தற்சார்பு வாழ்க்கை அப்படினா என்ன என்று உங்களுக்கு ஒரு கேள்வி வரும் தற்சார்பு வாழ்கை என்றால் நமக்கு தேவையான உணவு கல்வி பொருட்கள் இதுபோன்ற நமக்கு தேவையானவற்றை நாமே உற்பத்தி செய்துகொள்வது சுருக்கமாக சொன்னால் நமக்கு தேவையானவற்றை நாமே செய்துகொள்வது இதன் காரணமாக அந்த காலத்தில் வாழ்த்த மக்கள் பிறரை நம்பி வாழவில்லை ஆனால் இது பிடிக்காத வேலைக்காரன் இவர்களை அழித்து அவன் கல்வியை திணித்துவிட்டான் அனால் அது அன்று வரை இருந்திருந்தால் சரி அனால் இன்று வரை தொடர்வதே வருத்தத்திற்குரியது இதில் சுகந்திர தினம் வேற கொண்டாடுகிறோம் இதையெல்லாம் பார்க்கும் பொழுது வேடிக்கையாக உள்ளது .
சுதந்திர தனத்தை கேலி செய்கிறாயா என்று உங்களுக்கு கோபம் வந்தால் இப்ப சொல்வதை கேளுங்கள் கோபம் போய்விடும் சுதந்திரம் கிடைத்தற்கு முக்கிய காரணம் பிரிட்டிஷ் காரன் நமது இந்தியாவை ஆண்டதுதான் அடிமையாக வைத்ததுதான் சரியா ஆனால் இப்பொழுது என்ன நடக்கிறது வெள்ளைக்காரனை தான் நமது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் இது மாற வேண்டும் என்பதற்க்காக தான் நான் இவ்வளவு சொல்கிறேன் .
ஆனால் இப்போதுள்ள ஆசிரியர்களுக்கு அனுபவம் என்பதே கிடையாது ஆசிரியராக இருப்பதற்கு முதல் தகுதி அனுபவம் ஆனால் இப்போதெல்லாம் நான்கு வருடம் படிப்பை முடித்ததும் பள்ளியில் அல்லது கல்லூரியில் ஆசிரியராக சேர்த்துக்கொள்கிறார்கள் இதன் விளைவு அறியாமையில் மாணவ்ர்கள் உருவாகுவது இதனை தடுப்பதற்கு முப்பத்திஐந்து வயதுக்கு மேற்பட்ட வாழ்க்கையில் அனுபவம் உள்ள ஒருவரை ஆசிரியராக ஆக்க வேண்டும் .
ஒரு குழந்தைக்கு முதல் ஆசிரியர் அவளுடைய தாய் தந்தை தாத்தா பாட்டி இவர்களிடம் இருந்துதான் ஒரு குழந்தை தனது முதல் கல்வியை கற்கிறது இதன் மூலம் அந்த குழந்தைக்கும் தேவையான அனுபவம் கிடைக்கும் .
    
    மேலும் இது பற்றி விரிவாக முழுவதுமாக வேறொரு பதிவில் சந்திப்போம் .நன்றி ...

Comments

Popular posts from this blog

கை கழுவாமல் இருப்பதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் ?

பிரமிடு பற்றி யாரும் அறியாத 12 உண்மைகள் ( 12 unknown fact about Egypt pyramids in Tamil )

இராமருக்கு அணில் எப்படி உதவியது என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா?